/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் எடுப்பதை கண்காணிக்க ஊராட்சி செயலர்கள் மறுப்பு
/
மண் எடுப்பதை கண்காணிக்க ஊராட்சி செயலர்கள் மறுப்பு
ADDED : ஜூலை 28, 2024 03:45 AM
பனமரத்துப்பட்டி: தமிழக சிறு கனிம சலுகை விதிப்படி விவசாய பயன்பாட்டுக்கு ஏரியில் இருந்து வண்டல், களிமண் எடுக்க அரசு அனுமதித்துள்-ளது.
இதற்கு அனுமதி கோருவோருக்கு வருவாய்த்துறை மூலம் அனு-மதி வழங்கப்படும். கடந்த காலத்தில் ஏரியில் மண் எடுப்பதில் விதிமீறல் நடப்பதை, உள்ளுர் வருவாய்த்துறையினர் கண்கா-ணித்து நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளில் மண் எடுப்பதை, ஊராட்சி செயலர்கள் கண்காணிக்க அறிவுறுத்-தப்பட்டது. இதற்கு ஊராட்சி செயலர்கள் மறுப்பு தெரிவித்துள்-ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் கூறியதாவது:
ஏரி ஊராட்சிக்கு சொந்தமானதாக இருந்தாலும், கனிம வளத்-துறை, வருவாய்த்துறைதான் பொறுப்பு. ஏரியில் வீதிமீறி மண் எடுப்பதில் அரசியல்வாதிகளின் தலையீடு அதிகம் இருக்கும். தாசில்தார் உள்ளிட்ட அதிகாரம் உள்ள அதிகாரிகளே தடுக்க முடி-யாமல் தடுமாறுகின்றனர்.
கனவு இல்லம், ஊரக குடியிருப்பு பராமரிப்பு, உள்ளாட்சி தேர்தல் பணிகள் உள்ளதால், ஊராட்சி செயலர்கள் மண் எடுப்-பதை கண்காணிக்க இயலாது என, மாவட்ட நிர்வாகத்திடம் தெரி-விக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையினர் தப்பிக்க, அரசியல்வாதிகளுடன் எங்களை கோர்த்துவிட பார்க்கின்றனர். வருவாய்த்துறையினரிடம் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரம் உள்ளது. அவர்கள், ஏரியில் மண் எடுப்பதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.