/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பண்ணப்பட்டி குட்டை கரை பலப்படுத்தும் பணி தொடக்கம்
/
பண்ணப்பட்டி குட்டை கரை பலப்படுத்தும் பணி தொடக்கம்
ADDED : அக் 13, 2024 08:25 AM
ஓமலுார்: பண்ணப்பட்டி குட்டை கரையை பலப்படுத்தும் பணி தொடங்-கப்பட்டுள்ளது.காடையாம்பட்டி, பண்ணப்பட்டி ஊராட்சியில், 48 ஏக்கரில் குட்டை உள்ளது. சில நாட்களாக மழையால் குட்டைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதனால் நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் குட்டை கரைகளில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு கரை உடையும் அபாயம் ஏற்பட்டது.இதையடுத்து ஊராட்சி, வருவாய், நீர்வளத்துறை அதிகாரிகள் பார்-வையிட்டு, குட்டைக்கு வரும்
தண்ணீரை, ராகவாம்பாள் அணை பகுதியில் தடுத்து நிறுத்தினர். அந்த தண்ணீரை தாராபுரம்,
வடம-னேரிக்கு திருப்பினர். நேற்று முன்தினம் நள்ளிரவு குட்டை நிரம்பி கோடி விழுந்தது. இதனால்
கரை சேதமடையாமல் இருக்க, தண்ணீர் வெளியேறும் பகுதியில் உள்ள தடுப்புகளை அகற்றி,
வேகமாக நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்-டனர்.நேற்று காலை, கரையில் ஏற்பட்ட விரிசல் குறித்து மேட்டூர் சப்-க-லெக்டர் பொன்மணி பார்வையிட்டு,
கரையை பலப்படுத்தும் பணி குறித்து நீர்வள பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பிராசந்திடம்
ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, கரையில் மண் கொண்டு பலப்படுத்தும் பணியை, தேசிய
நெடுஞ்சா-லையில் பாலம் கட்டுவோர் மேற்கொண்டு வருகின்றனர். இரு நாட்களில் இப்பணி முடிந்து
அதிகாரிகள் ஆய்வுக்கு பின், குட்-டைக்கு மீண்டும் தண்ணீர் நிரப்பப்படும் என, பொதுப்பணித்-துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.