/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஞ்சல் அலுவலகத்தில் காகிதமில்லா பரிவர்த்தனை
/
அஞ்சல் அலுவலகத்தில் காகிதமில்லா பரிவர்த்தனை
ADDED : மார் 03, 2025 07:40 AM
சேலம்: சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் அறிக்கை: அஞ்சல் துறை வாடிக்கையாளர் வசதிக்கு, காகிதமில்லா ஆதார் அடிப்படையிலான, இ -கே.ஒய்.சி., எனும் அங்கீகார செயல்முறை பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கணக்கில் உள்ள, வாடிக்கையாளரின் கே.ஒய்.சி., விபரங்களை மேம்படுத்திக்கொள்ளுதல், நிதி பரிவர்த்தனை, புது சேமிப்பு கணக்கு தொடங்குதல் என, முக்கிய பரிவர்த்தனைகளை, ஆதார் அடிப்படையில் கைரேகை மட்டும் வைத்து, அஞ்சல் நிலையங்களில் மேற்கொள்ளலாம்.
சேமிப்பு கணக்கில் இருந்து, 5,000 ரூபாய், அஞ்சலக கணக்கில் இருந்து எடுத்துக்கொள்ள முடியும். இந்த வசதியை, சேலம் கிழக்கு கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம், அனைத்து துணை அஞ்சலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை, மக்கள் பயன்படுத்தி, காகிதமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.