/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பார்சல் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
/
பார்சல் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : ஜன 31, 2024 01:02 AM
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் கலைஞர் காலனியை சேர்ந்த பழனிசாமி மகன் ராகுல், 27.
பட்டதாரியான இவர், விநாயகபுரம் கூட்ரோடு பகுதியில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில், எட்டு ஆண்டுகளாக கிளை மேலாளராக பணிபுரிந்தார்.
நேற்று முன் தினம், தன் நண்பர்களின் மொபைல் போன் வாட்ஸாப்பில் ஆடியோ வெளியிட்டு விட்டு, துாக்கில் தொங்கினார்.
நண்பர்கள் விரைந்து வந்து, ராகுலை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள், ராகுல் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.
ராகுல் அனுப்பிய ஆடியோ மற்றும் கிளை அலுவலகத்தில் அவர் துாக்கிட்டு கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நண்பர்களுக்கு ராகுல் அனுப்பி இருந்த ஆடியோவில், 'நிறுவன உரிமையாளர், நாமக்கல் நிர்வாகி உட்பட மூன்று பேர், மனரீதியாக துன்புறுத்தியும், கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என, தொந்தரவு செய்கின்றனர்.
இதனால், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன். என் பெற்றோரை கவனமாக பார்த்துக் கொள்ளவும்' என, பேசியுள்ளார்.
ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.