/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'
/
சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'
சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'
சேலத்தில் தனியார் பள்ளி மூடுவதாக பரவிய தகவல் பெற்றோர் முற்றுகைபா.ம.க.,-எம்.எல்.ஏ., 'ஸ்டண்ட்'
ADDED : டிச 24, 2024 07:51 AM
சேலம்: சேலத்தில், தனியார் பள்ளியை மூடப்போவதாக தகவல் பரவி-யதால், பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர். போராட்-டத்தில் பங்கேற்ற, பா.ம.க.,- எம்.எல்.ஏ., திடீரென பள்ளி நிர்-வாகிகள் காலில் விழுந்தார்.
சேலம், பழைய சூரமங்கலம் பகுதியில் ஸ்ரீராமலிங்க வள்ளலார் துவக்க மற்றும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் வகுப்பு வரை உதவி பெறும் பள்ளியாகவும், 6 முதல், பிளஸ் 2 வரை சுயநிதி பள்ளியாகவும் செயல்பட்டு வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.இந்நிலையில் பள்ளியை மூடப்போவதாக, பெற்றோரிடையே தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று, 100க்கும் மேற்பட்ட பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்-டனர். அங்கு வந்த சேலம் மேற்கு பா.ம.க.,-எம்.எல்.ஏ., அருள், பெற்றோரிடம் தகவல் கேட்டறிந்தார். பின் போலீசார், பள்ளி நிர்-வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறிது நேரம் அவரும் மறியலில் ஈடுபட்டார்.அப்போது பள்ளி நிர்வாகத்தினர், 'பள்ளியை மூடும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், தவறான தகவல்களை பரப்பியுள்-ளனர்' என, தெரிவித்தனர். இந்நிலையில் திடீரென, பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள், நிர்வாகிகள் காலில் விழுந்து, 'பள்ளியை மூடக்கூடாது' என கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.பப்ளிசிட்டிக்காக ஸ்டண்ட்பா.ம.க.,- எம்.எல்.ஏ., அருள், காலில் விழுந்து பப்ளிசிட்டி தேடுவதையே வழக்கமாக வைத்துள்ளார் என, பிற கட்சியினர் கூறுகின்றனர். கடந்த, 2022 நவ., 8ல், முத்துநாயக்கன்பட்டி டாஸ்மாக் கடையை மூடுமாறு, கடை ஊழியர்களின் காலில் விழுந்தார். இந்தாண்டு ஜன.,24ல், சைக்கிள் வழங்கும் விழா-வுக்கு அவர் தாமதமாக வந்ததால், பாகல்பட்டி அரசு மேல்நி-லைப்பள்ளியில் மாணவ, மாணவியர் காலில் விழுந்தார். நேற்று,'பள்ளியை மூடும் எண்ணம் இல்லை' என, பள்ளி நிர்-வாகம் கூறிய பின்பும், காலில் விழுந்தார். இதை பிற கட்சி நிர்-வாகிகள் 'பப்ளிசிட்டி தேடுகிறார்' என, கமென்ட் அடித்து வரு-கின்றனர்.