/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'டிசி' கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்
/
'டிசி' கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்
'டிசி' கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்
'டிசி' கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட மாணவர்களின் பெற்றோர்
ADDED : நவ 20, 2024 07:35 AM
தாரமங்கலம்: மாணவர்களின், 'டிசி'க்களை கேட்டு அவர்களது பெற்றோர், அரியாம்பட்டி நடுநிலைப்பள்ளியை முற்றுகையிட்டனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே அரியாம்பட்டி நடுநிலைப்பள்ளியில், 200 பேர் படிக்கின்றனர். தலைமையாசிரியர் செல்வம், ஆங்கில ஆசிரியர் சீதாராமன் உள்பட, 4 ஆசிரியர்கள், 5 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் சீதாராமன், அரசு பணியில் இருந்து கொண்டு, அ.தி.மு.க., கட்சி சார்ந்த பணிகளை செய்வதாகவும், பணி நேரத்தில் மொபைல் போனில் பேசிக்கொண்டு பாடம் நடத்துவதில்லை என்றும் கல்வித்துறைக்கு புகார் சென்றுள்ளது.இதனால் தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ(தொடக்க கல்வி) விசாரணையில், ஆசிரியர் விவசாய சங்கத்தில் இருந்ததை, சீதாராமன் ஒப்புக்கொண்டார். இதனால் அவர் மீது நேற்று முன்தினம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையறிந்த மாணவர்களின், 100க்கும் மேற்பட்ட பெற்றோர், மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ்(டி.சி.,) கேட்டு, நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். தாரமங்கலம், ஜலகண்டாபுரம் போலீசார், வட்டார கல்வி அலுவலர் வாசுகி, பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதால், பெற்றோர் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது: சீதாராமன் மீது, கல்வி அதிகாரியிடம் கடந்த, 14ல் சிலர் மனு அளித்தனர். இத்தகவல் தலைமையாசியருக்கு தெரிந்தும், இதுகுறித்து பள்ளி மேலாண் குழுவிடம் தெரிவிக்கவில்லை. அப்போதே தெரிவித்திருந்தால், சம்பந்தப்பட்ட ஆசிரியரை அழைத்து பேசி, பிரச்னையின்றி தடுத்திருக்கலாம். ஏற்கனவே இங்கு பணிபுரிந்த பட்டாரி ஆசிரியர்கள், சில காரணங்களால் வேறு பள்ளிக்கு சென்று விட்டனர். தற்போது நிரந்தர ஆசிரியர்கள் குறைவாக உள்ள நிலையில் இதுபோன்ற பிரச்னைகளால் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால், பிள்ளைகளின் கல்வி கேள்விக்குறி ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.