/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீரால் வைரஸ் பாதிப்பு குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
/
பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீரால் வைரஸ் பாதிப்பு குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீரால் வைரஸ் பாதிப்பு குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
பள்ளியை சுற்றி தேங்கிய கழிவு நீரால் வைரஸ் பாதிப்பு குழந்தைகளை வகுப்புக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்
ADDED : பிப் 04, 2025 06:46 AM
எலச்சிபாளையம்: பள்ளியை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீரால், வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு மாணவர்கள் அவதிப்படுவதாக கூறி, ஆத்திரமடைந்த பெற்றோர், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், மணலிஜேடர்பாளை-யத்தில், 2,500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 10,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இங்கு, பஞ்சாயத்து தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்று முதல்
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 174 மாணவ, மாணவியர் படித்து
வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன் பெய்த மழையால், பள்ளியின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் மழைநீருடன்,
கழிவுநீரும் சேர்ந்து தேங்கி குட்டைபோல் காணப்படுகிறது. மேலும், பள்ளி வளாகம் தாழ்வான பகுதியில்
அமைந்துள்ளதால், வளாகத்திற்குள்ளேயும் மழைநீர் தேங்கியது. இதனால், பள்ளி சுற்றுச்சுவரில் ஆங்காங்கே
விரிசல் ஏற்பட்டு, எந்நேரமும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மழைநீர் தேங்கி உள்ளதால்,
கொசுக்கள் உற்-பத்தியாகி, மாணவர்கள் பலர், வைரஸ் உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு
வருகின்றனர். இதற்கிடையே, கடந்த, இரண்டு மாதங்களுக்கு முன் அப்பகு-தியில் ஆய்வு செய்த நாமக்கல் கலெக்டர் உமா,
பள்ளியின் நிலையை கருத்தில்கொண்டு, நீர் தேங்குவதை தடுக்க, 'பேவர் பிளாக்' பதிக்க, 10 லட்சம் ரூபாய் நிதி
ஒதுக்கீடு செய்தார். ஆனால், இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. இதனால், ஆத்-திரமடைந்த பெற்றோர்,
நேற்று, தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: பள்-ளியை சுற்றி கழிவுநீர், குப்பை தேங்கி
காணப்படுகிறது. இதில் கொசு உற்பத்தியாகி, மாணவர்களை கடிப்பதால், வைரஸ் காய்ச்-சல்களால்
பாதிக்கப்பட்டு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். தினமும், 40 முதல், 50 மாணவ, மாணவியர் காய்ச்சல்
தொந்த-ரவால் விடுமுறை எடுத்து வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன், ஆய்வு செய்த கலெக்டர்,
பள்ளியில் தண்ணீர் தேங்காத வகையில், 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்க நடவடிக்கை எடுக்கப்-படும் என
தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்த பிறகே,
எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். எலச்சிபாளையம் பி.டி.ஓ., லோகமணிகண் டன் கூறுகையில், ''இப்பள்ளியில் மழைநீர் தேங்காத வகையில்,
'பேவர் பிளாக்' கற்கள் பதிக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்-ளது. பள்ளி வளாகம் ஈரமாக
இருப்ப தால் பணிகளை தொடங்க முடியவில்லை. இன்று முதல் (நேற்று) பணிகள் தொடங்கும்,'' என்றார்.தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் பச்சமுத்து, வட்-டார கல்வி அலுவலர் வெங்கடாஜலம் ஆகியோர்,
போராட்-டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, 'பள்-ளியை சுற்றி தேங்கி உள்ள கழிவுநீர்
அகற்றப்படும்' என, உறுதி அளித்தனர்.

