/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளிக்கு அறிவியல் ஆசிரியர் நியமிக்க பெற்றோர் வலியுறுத்தல்
/
அரசு பள்ளிக்கு அறிவியல் ஆசிரியர் நியமிக்க பெற்றோர் வலியுறுத்தல்
அரசு பள்ளிக்கு அறிவியல் ஆசிரியர் நியமிக்க பெற்றோர் வலியுறுத்தல்
அரசு பள்ளிக்கு அறிவியல் ஆசிரியர் நியமிக்க பெற்றோர் வலியுறுத்தல்
ADDED : ஜூன் 08, 2025 01:13 AM
பனமரத்துப்பட்டி, மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதில், 10ம் வகுப்பு தமிழ் வழி கல்வியில், ஏ, பி, சி., என, 3 பிரிவுகள், ஆங்கில வழி கல்வியில் ஒரு பிரிவில், 120 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அதேபோல், 6, 7, 8ம் வகுப்புகளில் தலா இரு பிரிவுகள், 9ம் வகுப்பில், 4 பிரிவுகள் உள்ளன. 6 முதல், 10ம் வகுப்பு வரை, 3 அறிவியல் ஆசிரியர்கள் இருந்த நிலையில், சமீபத்தில் ஒருவர் ஓய்வு பெற்று விட்டார்.
தற்போது, இரு அறிவியல் ஆசிரியர்கள், தினமும், 14 பிரிவுகளுக்கும் சென்று பாடம் நடத்த முடியாத நிலை உள்ளது. மேலும் கூடுதல் வேலைப்பளுவால், இரு ஆசிரியர்கள் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். மேலும் அறிவியல் பாடத்தில் மாணவ, மாணவியர் பின்தங்கும் நிலை உருவாகும். முக்கியமாக நடப்பாண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள, 120 மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவர் என்பதால், அறிவியல் ஆசிரியர் நியமிக்க, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.