ADDED : ஜூன் 08, 2026 05:05 AM

ஏற்காடு; ஏற்காடுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பய-ணியர் வந்து செல்கின்றனர். கடந்த மாத இறு-தியில் கோடை விழா, மலர் காட்சி நடந்ததால், ஒன்றிய கலையரங்கம் பின்புறம், சுற்றுலா பய-ணியரின் கார்களை நிறுத்த, போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்தனர்.
தற்போது கோடை விழா முடிந்து விடுமுறை நாளான நேற்று, ஏராளமான சுற்றுலா பயணியர் ஏற்காடில் குவிந்தனர். அவர்களது வாகனங்களை நிறுத்த, 'பார்க்கிங்' வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட-வில்லை. இதனால் வாகனங்களை ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்திவிட்டு, சுற்றுலா பயணியர் பல்வேறு இடங்களை ரசிக்க சென்-றனர். இதில் அண்ணா பூங்கா சாலையில் நேற்று காலையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட, சுற்-றுலா பயணியரின் மற்ற கார்கள் அணிவகுத்து நின்று ஊர்ந்தபடி சென்றன. அதனால் வாகனங்-களை முறையாக நிறுத்திச்செல்ல, 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, சுற்றுலா பய-ணியர் வலியுறுத்தினர்.
அணை பூங்கா
மேட்டூர் அணை பூங்காவை, 4,356 சுற்றுலா பய-ணியர் நேற்று பார்வையிட்டனர். இதன் மூலம் நீர்வளத்துறைக்கு பூங்கா நுழைவு, மொபைல் வைப்பு, பவளவிழா கோபுரத்தைபார்வையிடுவ-தற்கான கட்டணங்கள் மூலம், 70,910 ரூபாய் கிடைத்தது.
