/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே ஸ்டேஷனில் 'பார்க்கிங்'; நடைபயிற்சிக்கும் கட்டணம் வசூல்
/
ரயில்வே ஸ்டேஷனில் 'பார்க்கிங்'; நடைபயிற்சிக்கும் கட்டணம் வசூல்
ரயில்வே ஸ்டேஷனில் 'பார்க்கிங்'; நடைபயிற்சிக்கும் கட்டணம் வசூல்
ரயில்வே ஸ்டேஷனில் 'பார்க்கிங்'; நடைபயிற்சிக்கும் கட்டணம் வசூல்
ADDED : பிப் 21, 2025 07:35 AM
ஓமலுார்: ஓமலுார் ரயில்வே ஸ்டேஷனில் பெங்களூரு - காரைக்கால் பயணியர் எஸ்க்பிரஸ், மேட்டூர் அணை - ஈரோடு, யஷ்வந்த்பூர் - சேலம் ஆகிய பயணியர் ரயில்கள் நின்று செல்கின்றன. தினமும், 80க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். இந்த ஸ்டேஷனில், 'பார்க்கிங்' வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில், கடந்த வாரம் முதல், இருசக்கர வாகனம், கார் நிறுத்த, 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, 2 மணி நேரத்துக்கு சைக்கிளுக்கு, 2 ரூபாய், மொபட், பைக்குக்கு, 5 ரூபாய், காருக்கு, 20 ரூபாய் என, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத கட்டணமாக சைக்கிளுக்கு, 150, மொபட், பைக்குக்கு, 300, காருக்கு, 2,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஸ்டேஷனில் நடைப்பயிற்சி மேற்கொள்ள, 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.