/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி பகுதி நேர ஆசிரியர் சிக்கினார்
/
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி பகுதி நேர ஆசிரியர் சிக்கினார்
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி பகுதி நேர ஆசிரியர் சிக்கினார்
ரிசர்வ் வங்கி' பெயரில் மோசடி பகுதி நேர ஆசிரியர் சிக்கினார்
ADDED : ஜூன் 27, 2025 01:47 AM
சேலம், 'ரிசர்வ் வங்கி' பெயரை பயன்படுத்தி, இரிடியம், காப்பர் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என, சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில், 20க்கும் மேற்பட்டோரிடம், 4.50 கோடி ரூபாய் மோசடி நடந்தது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து, தஞ்சாவூரை சேர்ந்த நித்யானந்தம், சந்திரா, தர்மபுரி அன்புமணி, சேலம் முத்துசாமி, கேசவன், பார்த்தசாரதி, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கி ேஷார் குமார் ஆகியோரை கைது செய்தனர். இரு நாட்களுக்கு முன், பெங்களூரை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் விக்னேஷ், தர்மபுரி செந்தில், மயிலாடுதுறை ஜோசப் ஆகியோரை கைது செய்து, ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் நேற்று, நாமக்கல்லை சேர்ந்த சஞ்சய், 35, என்பவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது
செய்தனர். அவர், சேலம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், பகுதி நேர ஆசிரியராகவும், நாமக்கல்லில் ஆப்டிக்கல் கடை நடத்தி வந்ததும் தெரிந்தது. இவருடன் சேர்ந்து, இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது.