/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரப்படுத்த வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2025 12:45 AM
சேலம், தமிழக சிறப்பாசிரியர் சங்கம் சார்பில், பணி நிரந்தம் கேட்டு, சேலம் கோட்டை மைதானத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கவாஸ்கர் தலைமை வகித்தார். அதில் ஒருங்கிணைப்பாளர்
பரமசிவம் பேசியதாவது:தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள், 12,000 பேர். அவர்களுக்கு, 14 ஆண்டாக வெறும், 12,500 ரூபாய் மட்டும் ஊதியம் வழங்கப்படுகிறது.
இதர பணப்பலன், சலுகை கிடையாது. தி.மு.க.,வின், 181வது தேர்தல் வாக்குறுதியில், பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நாலரை ஆண்டுகள் கடந்தும், அரசு கண்டு கொள்ளவில்லை. பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். செய்தி தொடர்பாளர் சீனிவாசன், மாதேஸ்வரன் உள்பட பலர்
பங்கேற்றனர்.