/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பஸ்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
/
பஸ்கள் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
ADDED : ஆக 22, 2025 01:51 AM
நாமக்கல், வளையப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள, பயணிகள் நிழற்கூடத்தில் பஸ்கள் நின்று செல்ல அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்-திருச்சி சாலை விரிவாக்கப்பணி நடந்தது. அதற்காக பல இடங்களில், சாலையின் ஓரம் இருந்த பழைய நிழற்கூடங்களை அகற்றிவிட்டு, புதிய நிழற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வளையப்பட்டியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் அதில் பயணிகள் காத்திருந்தும் அரசு, தனியார், டவுன் பஸ் மற்றும் மப்சல் பஸ்கள் நிற்பது கிடையாது.
நிழற்கூடம் இல்லாத இடத்தில் பஸ்களை நிறுத்தி செல்கின்றனர். எனவே புதிதாக அமைக்கப்பட்ட நிழற்கூடத்தில், அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல பஸ் டிரைவர்களுக்கு, போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.