/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விபத்து, அவசர சிகிச்சை பிரிவு தயார் திறக்கப்படாததால் நோயாளிகள் அவதி

ADDED : ஏப் 07, 2025 04:29 AM
வாழப்பாடி: வாழப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம், 2016ல் அரசு மருத்துவ-மனையாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 3.63 கோடி ரூபாய் செலவில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஆண், பெண் நோயாளிகள் பிரிவு, ஆப்ரேஷன் தியேட்டர், எக்ஸ்ரே ரூம் உள்ளிட்ட வசதிகளுடன், 3 அடுக்குகள் கொண்ட கட்டுமானப்-பணி, இரு ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்டு, இரு மாதங்க-ளுக்கு முன் முடிந்தது. இருப்பினும் அந்த கட்டடம் பயன்பாட்-டுக்கு கொண்டுவரப்படவில்லை.
இதனால் நோயாளிகள் முதலு-தவி செய்துகொண்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலையே தொடர்கிறது. இதனால் எலும்பு முறிவு, பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு மருத்துவர்-களை நியமித்து, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்ட-டத்தை, உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.இதுகுறித்து வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்-துவர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, ''விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு விரைவில் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை மேற்-கொள்ளப்படுகிறது. சிறப்பு மருத்துவர்கள் நியமனம் குறித்து உயர் அதிகாரிகளிடம்
தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.