/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணியின்போது இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கல்
/
பணியின்போது இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கல்
பணியின்போது இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கல்
பணியின்போது இறந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஓய்வூதியம் வழங்கல்
ADDED : ஜூன் 06, 2025 02:31 AM
சேலம்,தொழிலாளர்கள் பணியின்போதோ, நோய் அல்லது விபத்தால் உயிரிழந்தாலோ, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, இ.எஸ்.ஐ., சார்பில், மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, 'சதிஷ் இன்ஜினியரிங்' நிறுவனம் மூலம், மேட்டூர் தெர்மல் பவர் பிளான்ட் - 1ல், ஒப்பந்ததாரராக பணியாற்றிய வெங்கடேசன், பழனிசாமி, கடந்த ஆண்டு டிச., 12ல், பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தனர். இதனால் வெங்கடேசன், பழனிசாமி குடும்பத்தினருக்கு, ஓய்வூதியமாக மாதந்தோறும், 14,430 ரூபாய் வழங்க, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல அலுவலக இணை இயக்குனர் சிவராமகிருஷ்ணன்(பொ), உத்தரவிட்டார்.
அதன்படி, தெர்மல் பவர் பிளான்ட் செயற்பொறியாளர் செந்தில்குமார், சதிஷ் இன்ஜினியரிங் உரிமையாளர் அசோகன் முன்னிலையில், இறந்தவர்களின் இரு குடும்பத்தினரிடம் ஓய்வூதிய தொகையை, இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் அருண் பாலாஜி நேற்று முன்தினம் வழங்கினார்.