/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கருப்பு உடை அணிந்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
/
கருப்பு உடை அணிந்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 23, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின், மாவட்ட மையம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கருப்பு உடை அணிந்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் வடிவேலு தலைமை வகித்தார்.
அதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிப்படி, சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, ஓய்வூதியத்தை முறைப்படுத்தல்; சிறப்பு ஓய்வூதியம், 6,750 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட செயலர் நடராஜன், ஆதரவு தெரிவித்த பிற சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.