/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒன்றிய அதிகாரிகளின் பேச்சில் சமரசம் மறியல் போராட்டத்தை கைவிட்ட மக்கள்

ADDED : மே 13, 2025 02:27 AM
பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி, திப்பம்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவில், 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்குள்ள மக்கள் பயன்படுத்த, எட்டு தனிநபர் கழிப்பிடம் கட்டியுள்ளனர்.
ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதடைந்ததால், கடந்த ஒரு மாதமாக கழிப்பிடத்திற்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. கழிப்பிடத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல், அவதிப்பட்டனர்.
கழிப்பிடத்திற்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி, திப்பம்பட்டியில் நேற்று காலை, 10:00 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக, பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பனமரத்துப்பட்டி ஒன்றிய தனி அலுவலர் கார்த்திக், திப்பம்பட்டி சென்றார். பா.ஜ., முன்னாள் ஒன்றிய தலைவர் மோகன்ராஜ், முன்னாள் ஒன்றிய பொதுச்செயலர் தமிழ்நேசன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உடனடியாக, ஆழ்துளை கிணற்றில் தற்காலிகமாக பழைய மோட்டார் இறக்கி, தண்ணீர் எடுத்து கழிப்பிடத்திற்கு வினியோகம் செய்யப்பட்டது. அந்த ஆழ்துளை கிணற்றில், புதிய மின் மோட்டார் இறக்கி, தடையின்றி தண்ணீர் வழங்குவதாக, அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின், மறியல் கைவிடப்பட்டது.