/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இருள் சூழ்ந்த சந்திப்பு அச்சத்தில் மக்கள்
/
இருள் சூழ்ந்த சந்திப்பு அச்சத்தில் மக்கள்
ADDED : டிச 18, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி - மல்லுார் சாலையில், களரம்பட்டி அருகே, 4 சாலைகள் சந்திக்கின்றன. அங்கு பெரமனுார், களரம்பட்டி சாலையில் உள்ள, 6 தெரு விளக்குகள், இரு மாதங்களாக எரியவில்லை. மல்லுார் சாலையில் தெருவிளக்கு இல்லை. இரவில் சாலை சந்திப்பில் இருள் சூழ்ந்துள்ளதால், அந்த வழியே செல்லவே, மக்கள் அச்சப்படுகின்றனர்.
சாலையில் உள்ள பள்ளத்தால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறுகின்றனர். இரவில் வழிப்பறி நடக்கும் அச்சம் உள்ளதால், தெருவிளக்குகளை எரிய விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.