/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் பெய்த தொடர் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி
/
சேலத்தில் பெய்த தொடர் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி
சேலத்தில் பெய்த தொடர் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி
சேலத்தில் பெய்த தொடர் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதி
ADDED : செப் 12, 2025 01:41 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாரலை வரை மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, பிரபாத், மிலிட்டரி ரோடு, 5 ரோடு, சாரதா கல்லுாரி சாலை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டியது.
இதனால், சாலையில் சாக்கடை நீருடன் மழைநீரும் கலந்து ஓடியது. கிச்சிப்பாளையம், நாராயண நகர் பகுதியில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் கடும் அவதியடைந்தனர்.
செவ்வாய்பேட்டை, அச்சிராமன் தெருவில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், நடந்து சென்றவர்கள், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தவித்தனர்.
சேலம் மாவட்டத்தில்
263.10 மி.மீ., மழை
சேலம் மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் வரை, பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதில் சேலத்தில், 62.6 மி.மீ., மழை பெய்தது. ஏற்காடு, 29.4, வாழப்பாடி, 3, ஆணைமடுவு, 1, ஆத்துார், 3, தம்மம்பட்டி, 2, கரியகோயில், 8, வீரகனுார், 7, சங்ககிரி, 5.2, இடைப்பாடி, 18, ஓமலுார், 12.5, மேட்டூரில், 51.4 மி.மீ., என மொத்தம், 263.10 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக, 16.44 மி.மீ., மழையும், அதிகபட்சமாக சேலத்தில், 62.6 மி.மீ., குறைந்தபட்சமாக ஆணைமடுவில், 1 மி.மீ., மழை பெய்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது.