/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணி தொடங்காததால் மோசமான சாலையில் மக்கள் அவதி
/
பணி தொடங்காததால் மோசமான சாலையில் மக்கள் அவதி
ADDED : ஏப் 21, 2025 07:19 AM
பனமரத்துப்பட்டி: மல்லுாரில் இருந்து பனமரத்துப்பட்டி செல்லும் சாலை, மல்லுார் டவுன் பஞ்சாயத்து பராமரிப்பில் உள்ளது.
அதில் அத்திக்குட்டை, செல்லியம்மன் கோவில் அருகே சாலை குண்டும் குழியுமாக உள்ளது. பெரியேரி, புளியந்தோப்பு உள்ளிட்ட இடங்களிலும் சீரழிந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன், டவுன் பஞ்சாயத்து சார்பில், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை சீரமைக்க தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால் பணி தொடங்காததால், சேதமான சாலையில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து தரப்பில் கூறுகையில், 'ஒப்பந்ததாரர் சாலை பணியை தொடங்குவதில் தாமதம் செய்து வருகிறார். அவர், வெவ்வேறு இடங்களில் நிறைய பணிகளை செய்கிறார். அப்பணியை முடிந்த பின், இச்சாலை பணியை செய்வதாக தெரிவித்துள்ளார்' என்றார்.

