/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
/
அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு
ADDED : டிச 11, 2024 07:16 AM
மகுடஞ்சாவடி : ஏகாபுரம் ஊராட்சி, 2வது வார்டு, செங்குட்டப்பட்டி அருந்ததியர் காலனியில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால், குடியிருப்புவாசிகள், வீடுகள் அருகே கழிவுநீரை தேக்கி வைக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுத்தொல்லை அதிகரித்து இரவில் நிம்மதியாக துாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
போதிய அளவில் தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இரவில் அருகில் உள்ள தோட்டங்களில் இருந்து விஷ ஜந்துக்கள், வீடுகளுக்குள் படையெடுப்பதால் சிறுவர்கள் அச்சப்படுகின்றனர். பொது கழிப்பறையும் இல்லாததால், பெண்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அடிப்படை வசதிகளை செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.

