ADDED : ஏப் 21, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஊராட்சி மேட்டுக்காட்டில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லாததால், 6 மாதங்களாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் உள்ளது.
பலர் அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று குடிநீர் வாங்கி வருகின்றனர். அதனால் சீரான குடிநீர் வினியோகம் செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.