/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது பஸ் ஸ்டாண்டில் 'மது' குடித்தோர் கைது
/
புது பஸ் ஸ்டாண்டில் 'மது' குடித்தோர் கைது
ADDED : ஜூலை 12, 2025 12:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் :ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சிலர், மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை வீசி உடைத்து ரகளை செய்வது தொடர்கிறது. நேற்று ஆத்துார் டவுன் போலீசார் ஆய்வு செய்தபோது, இருவர் மது அருந்திக்கொண்டிருந்தனர்.
விசாரணையில் தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்த சாரதி, 19, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் பிரின்ஸ், 19, என்பதும், நெல் அறுவடை இயந்திர டிரைவர்கள் என்பதும் தெரிந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.