/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
/
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜூலை 04, 2025 01:52 AM
தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சி கருத்தானுாரில், 6 மாதங்களுக்கு முன், ஆழ்துளை குழாய் கிணற்றில், மின்மோட்டார் பழுதானது. அதை சரிசெய்ய, கயிறு மூலம் மோட்டாரை வெளியே எடுத்தனர். அப்போது கயிறு அறுந்து, மோட்டார் ஆழ்துளை உள்ளே விழுந்தது.
பின் அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆழ்துளை உள்ள இடம், 'எங்களுக்கு சொந்தமானது' எனக்கூறி, ஆழ்துளையை மூடினர். இதனால் அப்பகுதி மக்கள், மின்மோட்டாரை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி, ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., இல்லாததால், அலுவலர்கள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, பி.டி.ஓ., முருகனிடம்(கி.ஊ.,) கேட்டபோது, ''நாளை(இன்று) சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.