ADDED : ஜூலை 10, 2026 05:16 AM

அ நிறம் | அளவு
கெங்கவல்லி:கெங்கவல்லி,
உலிபுரத்தில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு
வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை.
இதனால் போதிய
குடிநீர் தொட்டிகள் அமைக்கக்கோரி, நேற்று காலை, 9:30 மணிக்கு,
அப்பகுதி மக்கள், உலிபுரம் சாலையில், காலி குடங்களுடன் அமர்ந்து
மறியலில் ஈடுபட்டனர். கெங்கவல்லி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்,
தம்மம்பட்டி போலீசார், பேச்சு நடத்தி, சீரான குடிநீர் வினியோகிக்க
நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். காலை, 11:30 மணிக்கு மறியலை
கைவிட்டனர். இச்சம்பவத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன
ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
