ADDED : ஜூலை 10, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி:சேலம்
மாவட்டத்துக்கு வரும், 12 வரை எதிர்பார்க்கப்படும் வேளாண் வானிலை
முன்னறிவிப்பு குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட
ஒருங்கிணைப்பாளர் விஜயன் அறிக்கை:
தென் மேற்கு, மேற்கு திசையில்
இருந்து மணிக்கு 10 முதல், 14 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். 5
மாதங்களுக்கு மேற்பட்ட கரும்பு பயிரில் தோகை உரித்து, விட்டம்
கட்டுவது அவசியம். இது அதிக காற்றால் சாய்வதை தடுக்கும். குலை தள்ளிய
வாழை, நன்கு காய் பிடித்துள்ள பப்பாளி மரங்களுக்கு சவுக்கு அல்லது
மூங்கில் கொண்டு முட்டு கொடுத்து சாயாமல் பாதுகாக்கவும். தக்காளி,
கத்தரி, மிளகாய் போன்ற பயிர்களில் பூச்சி தாக்குலை கண்காணிக்க
விளக்குப்பொறிகள் அல்லது மஞ்சள் ஒட்டு பொறிகளை அமைக்க வேண்டும்.
