/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குழாய் உடைந்ததால் குடிநீர் வரவில்லை: மக்கள் சாலை மறியல்
/
குழாய் உடைந்ததால் குடிநீர் வரவில்லை: மக்கள் சாலை மறியல்
குழாய் உடைந்ததால் குடிநீர் வரவில்லை: மக்கள் சாலை மறியல்
குழாய் உடைந்ததால் குடிநீர் வரவில்லை: மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 11, 2025 06:07 AM
மேட்டூர்:மேட்டூர், ஒர்க்ஷாப் கார்னர் முதல் கொளத்துார் வரையான நெடுஞ்சாலை, 7 மீட்டர் அகலம் கொண்டது. அச்சாலையில், மேட்டூரில் இருந்து சென்றாய பெருமாள் கோவிலுக்கு, 1 கி.மீ.,க்கு முன் வரை, 3 மீட்டர் அகலத்துக்கு விரிவாக்க பணி நடக்கிறது. அதற்காக மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலையில் உள்ள கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி, மாசிலாபாளையத்தில், சாலையோரம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது ஊராட்சி சார்பில் பதித்திருந்த குடிநீர் குழாய் சேதம் அடைந்தது.
இதனால் ஊராட்சியில் ஒரு வீதிக்கு மட்டும், இரு நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த வீதி மக்கள், 10 பேர், காலிக்குடங்களுடன் நேற்று மதியம், மேட்டூர் - கொளத்துார் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறி-யலில் ஈடுபட்டனர். போலீசார், வருவாய்த்துறையினர், ஊராட்சி செயலர் குமார் ஆகியோர், பேச்சு நடத்தி, மாற்று குழாய்கள் மூலம் தற்காலிக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர். ஆனால் இச்-சம்பவத்தால், நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகினர்.

