ADDED : டிச 10, 2025 11:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், சூரமங்கலம், புது ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த, 55 வயது மதிக்கத்தக்க முதிய-வரை, இருவர் சேர்ந்து சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர்.
இந்த கொலை வெறி தாக்குதல் வீடியோ காட்சி, வாட்ஸாப்பில் பரவியது. இதை அறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த சூரமங்கலம் போலீசார், தாக்குதலில் காயம் அடைந்தவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தாக்கிய இருவரை தேடுகின்றனர்.

