/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழைநீர் வடிகால் கட்ட ரூ.4 கோடி நிதி கேட்பு
/
மழைநீர் வடிகால் கட்ட ரூ.4 கோடி நிதி கேட்பு
ADDED : டிச 10, 2025 11:07 AM
பனமரத்துப்பட்டி: மழைநீர் வடிகால் கட்ட அமைச்சரிடம், 4 கோடி ரூபாய் நிதி கேட்கப்பட்டுள்ளது.
மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் அத்திக்குட்டை உள்ளது. அதன் உபரிநீர் கால்வாய் மண் மூடி கிடக்கிறது. இதனால் அத்திக்குட்டை நிரம்-பினால், அதன் தெற்கு, மேற்கு பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுகிறது. வடக்கு பகுதியில் உள்ள, 10 ஏக்கருக்கு மேற்பட்ட விவ-சாய நிலங்களிலும் மழைநீர் தேங்குகிறது. 4வது வார்டில் ஒரு தெருவில் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் அத்திக்குட்டையின் உபரிநீர் தடத்தை சீரமைத்து தண்ணீரை வெளி-யேற்ற, விவசாயிகள், மக்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து டவுன் பஞ்சாயத்து துணைத்த-லைவர் அய்யனார் கூறியதாவது: அத்திக்குட்-டையில் இருந்து சேலம் செல்லும் சாலை-யோரம், பழைய பாலம் வரை கால்வாய் அமைத்து ஓடையில் மழைநீரை கொண்டு விட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு, 4 கோடி ரூபாய் நிதி வழங்கும்படி, நகராட்சி துறை அமைச்சர் நேருவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

