/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆலை கழிவுநீரால் பாதிப்பு; மக்கள் சாலை மறியல்
/
ஆலை கழிவுநீரால் பாதிப்பு; மக்கள் சாலை மறியல்
ADDED : டிச 11, 2024 07:16 AM
வாழப்பாடி : வாழப்பாடி, சந்திரபிள்ளைவலசில், நேற்று இரவு, 7:30 மணிக்கு, தனியார் தொழிற்சாலை கழிவுநீர் ஓடையில் கலப்பதாக தெரிவித்து, சின்னமநாயக்கன்பாளையம் மக்கள், அயோத்தியாப்பட்டணம் - பேளூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி போலீசார் பேச்சு நடத்தினர்.
அப்போது மக்கள் கூறியதாவது: நீர்முள்ளிக்குட்டையில் ஜவ்வரிசி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. அங்கிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு அந்த வழியே செல்லும் ஓடையில் கலக்கிறது. இதனால் சின்னமநாயக்கன்பாளையத்தில் நிலத்தடி நீர் மாசடைகிறது. மக்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, போலீசார் சமாதானப்படுத்தினர். இதனால் மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

