/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'கெயில்' பணியால் குடிநீர் குழாய் சேதம் பொக்லைனை முற்றுகையிட்ட மக்கள்

ADDED : ஆக 13, 2025 07:21 AM
ஓமலுார்: ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, அண்ணா நகர் மேற்கு பகுதி முதல், ஆர்.சி.செட்டிப்பட்டி ரவுண்டானா வரை, 'கெயில்' நிறுவனம் சார்பில், எரிவாயு குழாய் பதிப்பு பணி, ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வருகிறது.
இதில் குழாய்கள் சேதமாகி, பல நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், மக்கள் புகார் தெரிவித்த நிலையில், 'கெயில்' நிறுவனத்தினரே, குழாய்களை சீரமைத்து தருவர்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, நேற்று காலை, 'கெயில்' பணி நடந்த அலங்கார் தியேட்டர் முன், பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு, குழாய்களை சீரமைக்க கோரி, மக்கள் வலியுறுத்தினர்.
பின் ஊராட்சி அதிகாரிகள், கெயில் நிறுவன அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், மக்கள் கலைந்து சென்றனர்.