/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்த மக்களால் பரபரப்பு
/
புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்த மக்களால் பரபரப்பு
புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்த மக்களால் பரபரப்பு
புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்த மக்களால் பரபரப்பு
ADDED : டிச 24, 2024 07:52 AM
பவானி: பவானி -அடுத்த மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் கன்னி-மார்கரடு கிராமம் உள்ளது. இங்கு அரசு புறம்போக்கு உள்-ளதால், இரண்டு ஆண்டுகளாக, புறம்போக்கு நிலத்தை ஆக்கிர-மிக்க, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் குடிசை அமைப்பதும், அதை வருவாய் துறையினர் அகற்றுவதும் வாடிக்-கையாக உள்ளது. இந்நிலையில் நேற்று காலை, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, குடிசை அமைத்து இடத்தை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையறிந்த ஈரோடு தாசில்தார் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர், பவானி டி.எஸ்.பி., சந்திரசேகர், சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 'வீடு இல்லாதவர்கள் குடிசை அமைத்துக் கொள்ளலாம் என தகவல் வந்தது. இதனால் குடிசை அமைத்து மனை இடத்தை பிடிக்க வந்தோம்' என்று மக்கள் தெரிவித்தனர்.
'இது பொய்யான தகவல்; குடிசை அமைத்தவர்கள் தாங்களா-கவே அகற்றி கொள்ளுங்கள். மறுத்தால் காவல்துறை மற்றும் வருவாய் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தாசில்தார் தெரிவித்தார். இதையடுத்து குடிசைகளை அகற்றிக்-கொண்டனர். இதனால் காலை முதல் மாலை வரை பதற்றம் நீடித்தது.