/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் கருத்து கேட்பில் மக்கள் 'கறார்'
/
சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் கருத்து கேட்பில் மக்கள் 'கறார்'
சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் கருத்து கேட்பில் மக்கள் 'கறார்'
சுத்திகரிப்பு நிலையம் வேண்டாம் கருத்து கேட்பில் மக்கள் 'கறார்'
ADDED : செப் 21, 2024 06:52 AM
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி 2வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, துாய்மை பாரத இயக்கம், 2.0 திட்டத்தில், 9.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த, 5ல் பணி நடந்ததால், பா.ம.க., கவுன்சிலர் பாலசுந்தரம் உள்ளிட்ட மக்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரி-வித்தனர்.
இதனால் அவர்களிடம், நகராட்சி அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கமிஷனர் காஞ்சனா தலைமை வகித்தார். கழிவுநீர் சுத்திகரிப்பு திட்ட ஆலோசகர் கண்ணன், மக்-களிடம் கருத்து கேட்டார். அப்போது, '100 ஏரி திட்டத்தில் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் உபரிநீர்
கால்வாய் உள்ளது. அங்கு சுத்திகரிப்பு நிலைய சுற்றுச்சுவர் அமைத்தால் மயானத்-துக்கு செல்வதற்கு வழியில்லை. மைதானம், குப்பனுார்
துவக்கப்-பள்ளி மட்டுமின்றி விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளதால் சுத்திகரிப்பு கழிவால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும்' என்றனர்.அதற்கு, 'இத்திட்டத்தால் பாதிப்பு இல்லை' என கண்ணன் கூறினார். அதற்கும், 'எங்கள் பகுதியில் அமைக்க வேண்டாம்' என மக்கள் கூறினர்.
இதனால், 'உங்கள் கருத்தை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, கண்ணன் கூறி-யதால் கூட்டம் முடிந்தது.