/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம் இடத்தை மாற்ற மக்கள் வலியுறுத்தல்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம் இடத்தை மாற்ற மக்கள் வலியுறுத்தல்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம் இடத்தை மாற்ற மக்கள் வலியுறுத்தல்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய விவகாரம் இடத்தை மாற்ற மக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 30, 2024 02:45 AM
தாரமங்கலம்: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற, அதன் கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தினர்.
தாரமங்கலம் நகராட்சி, 2வது வார்டில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, துாய்மை பாரத இயக்கம், 2.0 திட்டத்தில், 9.74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அங்கு பணி நடக்கும்-போது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் காஞ்சனா தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில் மக்கள் கூறுகையில், 'சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பகுதிக்கு, 400 மீ., அருகே குடியிருப்பு, விவசாய நிலம் உள்ளன. இத்திட்டத்தால் நிலத்தடி நீர், மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்-ளது. நல்ல திட்டம் தான். ஆனால் செயல்படுத்தும் இடம் சரி-யில்லை' என கூறினர். அதற்கு கமிஷனர், 'வேறு இடத்துக்கு மாற்றும் அதிகாரம் என்னிடம் இல்லை. இதுகுறித்து கலெக்ட-ரிடம் தெரிவிக்கப்படும்' என்றார்.
தொடர்ந்து மக்கள், கமிஷனரிடம் அளித்த மனுவில், 'குடியி-ருப்பு, மக்களுக்கு பாதிப்பு இல்லாத, நகராட்சிக்கு சொந்தமான, 159/6 என்ற சர்வே எண் கொண்ட இடத்தில், இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என கூறியிருந்தனர்.
கூட்டத்தில் நகராட்சி தலைவர் குணசேகரன் உள்ளிட்ட கவுன்சி-லர்கள், அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.