/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாழடைந்த வீட்டில் பீதியில் வசிக்கும் மக்கள்
/
பாழடைந்த வீட்டில் பீதியில் வசிக்கும் மக்கள்
ADDED : செப் 24, 2024 07:39 AM
மகுடஞ்சாவடி: மகுடஞ்சாவடி ஊராட்சிக்கு உட்பட்ட அழகனுார், கஸ்பாபட்டி காலனி பகுதியில், 32 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகு-தியில், 30 ஆண்டுக்கு முன் தமிழக அரசு சார்பில், 10 கான்கிரீட் வீடுகள் கட்டிதரப்பட்டன. கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆகி-விட்டதால், பல வீடுகளின் மேல்தள கான்கிரீட் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்து விட்டது.
மழைக்காலங்களில் மழைநீர் சொட்டு சொட்டாக ஒழுகி, தரைத்தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் அடிக்கடி மேல்தளம் திடீரென பெயர்ந்து கீழே விழுவதால் குழந்தைகள் பீதியடைகின்றனர். பல
வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தில் உள்ளன. எனவே, பாழடைந்த வீடு-களை இடித்து அகற்றிவிட்டு, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.