/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடிசையில் வசிக்கும் மக்கள் கான்கிரீட் வீடு கட்ட அழைப்பு
/
குடிசையில் வசிக்கும் மக்கள் கான்கிரீட் வீடு கட்ட அழைப்பு
குடிசையில் வசிக்கும் மக்கள் கான்கிரீட் வீடு கட்ட அழைப்பு
குடிசையில் வசிக்கும் மக்கள் கான்கிரீட் வீடு கட்ட அழைப்பு
ADDED : டிச 28, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அங்கு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்துக்கு பயனாளிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்துக்கு, ஊராட்சிகளில் பயனா-ளிகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. இப்பணி வரும், 31ல் முடிய உள்ளது. பட்டா நிலத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் மக்கள், கான்கிரீட் வீடு கட்ட, 3.50 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்-படுகிறது. தகுதியான மக்கள், ஒன்றிய அலுவலகத்தை அணுகி, விபரத்தை பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.