/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுகாதார வளாகம் இன்றி குருவம்பாறை மக்கள் தவிப்பு
/
சுகாதார வளாகம் இன்றி குருவம்பாறை மக்கள் தவிப்பு
ADDED : டிச 17, 2024 07:23 AM
சேலம்: சேலம், தாரமங்கலம் பேரூராட்சி, 4வது வார்டு குருவம்பாறையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மக்கள், கையில் கோரிக்கை அட்டையை ஏந்தியபடி, நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: குருவம்பாறையில், பல ஆண்டுகளாக வசித்து வரும், 100க்கும் மேற்பட்ட
குடும்பத்தினருக்கு, கழிப்பிட வசதி இல்லை. அதனால், திறந்தவெளி பகுதியில் இயற்கை உபாதை கழிக்கும் பெண்கள், பல்வேறு
சிரமங்களுக்கு ஆளாகிறோம். இரவில் பாதுகாப்பு இல்லாததால், பரிதவித்து வருகிறோம். திறந்தவெளியை
பயன்படுத்துவதால், சுகாதார சீர்கேடு உண்டாகிறது. இது தொடர்பாக, ஓராண்டுக்கும் மேலாக மனு கொடுத்தும், பேரூராட்சி
நிர்வாகம் கண்டு கொள்ளளவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் சுகாதார வளாகம்
அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

