/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க பெ.க.புரம் மக்கள் வலியுறுத்தல்
/
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க பெ.க.புரம் மக்கள் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க பெ.க.புரம் மக்கள் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க பெ.க.புரம் மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 22, 2025 01:29 AM
அயோத்தியாப்பட்டணம், சேலம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரத்தில் கடந்த மார்ச், 1ல் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டு, அதற்கு முன்னதாக ஜன., 20ல், மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தொடர்ந்து வாழப்பாடி தாசில்தார் ஜெயந்தி, பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டும் அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில் வரும், 31ல் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு, கடந்த ஏப்., 29ல், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.
இதுவரை அனுமதி கிடைக்காததால், மக்கள், இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
பெரியகவுண்டாபுரத்தில், 300க்கும் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளனர்.
இங்கு அரசு அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்த, பல்வேறு முயற்சி மேற்கொண்டும் பலனில்லை. ஆண்டுதோறும் மே மாதத்துக்குள் நடத்த மட்டுமே அரசு அனுமதி என்பதால், வரும், 31ல் நடத்த அனுமதி வழங்காவிட்டால், நடப்பாண்டில் நடத்த முடியாமல் போய்விடும். இதனால் உடனே அனுமதி கொடுத்து ஜல்லிக்கட்டு நடத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.