/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் வீதியில் மேடை அமைக்க மக்கள் எதிர்ப்பு
/
கோவில் வீதியில் மேடை அமைக்க மக்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 28, 2025 07:10 AM
பனமரத்துப்பட்டி: மல்லுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சி நடக்க உள்ளது. அங்கு சந்தை திடலில் உள்ள கலையரங்கம் முன், சந்தை மேம்பாடு திட்டத்தில், மேற்கூரையுடன் கூடிய கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் கலையரங்கத்தில் நிகழ்ச்சி நடத்தினால் மக்கள் நின்று பார்க்க இட வசதி இல்லை. இதற்கு பதில், மல்லுார் சுனைக்கரடு ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியில் மேடை அமைத்து கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வீடுகள் நிறைந்த சிறு சாலையில் மேடை அமைத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேடை நிகழ்ச்சிக்கு அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி வைப்பதால், மக்கள் சிரமப்படுவர். கலைநிகழ்ச்சியை பார்க்க வரும் பலர், 'போதை'யில் ஆட்டம் போட்டு ரகளை செய்வர். இதனால் கோவிலுக்கு செல்லும் வீதியில் மேடை அமைக்க, போலீசார் அனுமதிக்கக்கூடாது' என்றனர்.

