/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குவாரியில் கற்கள் கடத்தல் லாரியை மடக்கிய மக்கள்
/
குவாரியில் கற்கள் கடத்தல் லாரியை மடக்கிய மக்கள்
ADDED : ஜூலை 04, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி, மேட்டுப்பட்டியை சேர்ந்த, கல் உடைப்போர் நலச்சங்க தலைவர் முருகன். இவர் அரசு அனுமதி பெற்று, வாழப்பாடி, தேக்கல்பட்டியில் கல்குவாரி நடத்துகிறார். அங்கு விதிமீறி பெரிய அளவில் கற்களை, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, லாரியில் ஏற்றி, கடத்த முயன்றனர்.
மக்கள், லாரியை பிடித்து, வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வருவாய்த்துறையினர், லாரியை, கற்களுடன் வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, வாழப்பாடி போலீசில் நேற்று புகார் கொடுத்தனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.