/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணறு புனரமைக்கப்படுமா போராட தயாராகும் மக்கள்
/
கிணறு புனரமைக்கப்படுமா போராட தயாராகும் மக்கள்
ADDED : ஆக 26, 2025 01:14 AM
சேலம், சேலம், காடையாம்பட்டி அடுத்த பண்ணப்பட்டி ஊராட்சி, காங்கியானுார் கிராம மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனு விபரம்:
காங்கியானுாரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். ஊரில், இரு தலைமுறைக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த பொது கிணறு, 8 மாதத்துக்கு முன் இடிந்து சேதமாகிவிட்டதால், பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளோம். 70 அடி ஆழமுள்ள கிணற்றில், தடாகம் போல தண்ணீர் எப்போதும் இருக்கும். வறட்சி காலத்தில் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் இந்த கிணற்று நீர், மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு புனித நீராகவும் பயன்படுத்தப்பட்டது.
மொத்தத்தில், ஊர் மக்களின் உயிர்நாடியாக விளங்கிய பொது கிணற்றை புனரமைத்து தரக்கோரி, ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். காடையாம்பட்டி பி.டி.ஒ., கிணற்றை நேரில் ஆய்வு செய்தார். ஆனால், 7 மாதமாகியும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் அரசு நிதி
ஒதுக்கவில்லை என்கின்றனர். எனவே, திரும்பவும் மனு கொடுத்து வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

