ADDED : டிச 11, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம் : தாரமங்கலம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, 26வது வார்டில் உள்ள மயானத்தில் கொட்டப்படுகிறது. சில நாட்களாக, மயான சாலையில் குப்பை கொட்டப்பட்டது. இதில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த வழியே வீடுகளுக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.
இதனால் நேற்று, அப்பகுதி மக்கள், குப்பை வாகனம் வராதபடி, மயானம் முன் கற்களை வைத்து தடுத்தனர். அங்கு வந்த தாரமங்கலம் போலீசார், நகராட்சி அதிகாரிகளிடம் பேசி, சாலையில் உள்ள குப்பையை அகற்ற அறிவுறுத்தினர். பின் மக்கள் கலைந்து சென்றனர்.