/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் மறியல்
/
சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் மறியல்
ADDED : நவ 13, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், முல்லைவாடியில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் சிலர்,
சாலையை, 2 அடி அளவில் ஆக்கிரமித்து, வீடு கட்டும் பணி மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நேற்று காலை, 11:00 மணிக்கு, சாலை ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தக்கோரி, அதே பகுதியில், ஆத்துார் - கல்லாநத்தம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். 15 நிமிடத்தில், ஆத்துார் டவுன் போலீசார் வந்து, பேச்சு நடத்தி, நிலத்தை அளவீடு செய்த பின், கட்டுமான பணி மேற்கொள்ள, தனி நபர்களிடம் அறிவுறுத்தினர். இதனால் மக்கள், மறியலை கைவிட்டனர்.

