/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை பணிக்கு இடையூறாக சிலர் ஆக்கிரமிப்பு வருவாய்த்துறையை கண்டித்து மக்கள் மறியல்

ADDED : செப் 27, 2025 01:28 AM
அயோத்தியாப்பட்டணம், சாலை பணிக்கு இடையூறாக சிலர் ஆக்கிரமித்துள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதி மக்கள், அரூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அயோத்தியாப்பட்டணம் அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில், நேற்று மதியம், 3:00 மணிக்கு, அப்பகுதி மக்கள், வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து, அரூர் நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். வீராணம் போலீசார், வருவாய்த்துறையினர் விரைந்து வந்து, பேச்சு நடத்தினர்.அப்போது மக்கள் கூறியதாவது: ஆச்சாங்குட்டப்பட்டி, ஏ.டி.காலனி
யில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அப்
பகுதியில் முழுமையாக சாலை அமைக்க விடாமல், சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சாலை அமைக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதனால் மதியம், 3:30 மணிக்கு மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.