/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுவாமி திருவீதி உலா நடத்தக்கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்
/
சுவாமி திருவீதி உலா நடத்தக்கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்
சுவாமி திருவீதி உலா நடத்தக்கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்
சுவாமி திருவீதி உலா நடத்தக்கோரி மக்கள் கடையடைப்பு போராட்டம்
ADDED : ஆக 15, 2025 03:04 AM
கெங்கவல்லி, சுவாமி திருவீதி உலா நடத்த அனுமதி கேட்டு, மக்கள் உண்ணாவிரதம் மற் றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி அருகே உலிபுரத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அக்கோவில் கருவறையில் இருந்து சுவாமியை எடுத்து வந்து, திருவீதி உலா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இதனால் இரு ஆண்டாக சுவாமி ஊர்வல நிகழ்ச்சிக்கு, அறநிலையத்துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்நிலையில் வரும், 26ல், கும்பாபி ேஷகத்தின், 2ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சுவாமி ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு, நேற்று காலை, 9:00 மணி முதல், மாரியம்மன் கோவில் அருகே, மக்கள் சார்பில் உண்ணாவிரதம், கடைகள் அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் தெரு, சாலைகள் வெறிச்சோடின.
கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி, தம்மம்பட்டி போலீசார், பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அங்கு, 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாசில்தார் நாகலட்சுமி கூறுகையில், ''ஒரு தரப்பினர், கருவறையில் இருந்து சுவாமியை எடுத்து வந்து, திருவிழா நடத்தி வருவதாக கூறினர். மற்றொரு தரப்பினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அறநிலையத்துறை, வருவாய்த்துறை என, அரசு மூலம் சிலையை எடுத்து வந்து விழா நடத்தவும் இருதரப்பினரும் உடன்படவில்லை. இதுதொடர்பாக அறநிலையத்துறை, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.