/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மக்கள் திட்டங்களை நிறுத்திய தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும்
/
'மக்கள் திட்டங்களை நிறுத்திய தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும்
'மக்கள் திட்டங்களை நிறுத்திய தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும்
'மக்கள் திட்டங்களை நிறுத்திய தி.மு.க.,வை புறக்கணிக்க வேண்டும்
ADDED : ஏப் 10, 2024 06:55 AM
வாழப்பாடி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, வாழப்பாடி ஒன்றியம், வாழப்பாடி, பேளூர் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் நேற்று வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார். அப்போது பேளூர், வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து, கோலாத்துக்கோம்பை, நீர்முள்ளிக்குட்டை, துக்கியாம்பாளையம், முத்தம்பட்டி, பொன்னாரம்பட்டி, சிங்கிபுரம் உள்பட, 50க்கும் மேற்பட்ட ஊர்களில், குமரகுரு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டனர். இந்த அரசை, விரைவில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். 2019ல் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, தொகுதி பக்கமே வரவில்லை. தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு, ஓட்டுகளை வீணாக்க வேண்டாம்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., ஏழை மாணவ, மாணவியர் நலனுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்து மருத்துவ கனவை நனவாக்கினார். வாழப்பாடிக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் தான் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தல், உயர்மட்ட பாலம், சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
முத்தம்பட்டி ரயில்வே கேட் பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வராக இருந்த, இ.பி.எஸ்., நிதி ஒதுக்கீடு செய்தார். அந்த பணியை, தி.மு.க., அரசு திட்டமிட்டு நிறுத்தியுள்ளது. இதுபோன்ற மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடித்து வரும், தி.மு.க.,வுக்கு இத்தேர்தலில் முடிவு கட்ட வேண்டும்.
தமிழக மக்கள் நலனில், அ.தி.மு.க.,வுக்கு மட்டும் தான் அக்கறை உள்ளது. இ.பி.எஸ்., கூறுவதுபோல், ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம். தமிழர் உரிமையை மீட்பதற்கு இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு போடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, வாழப்பாடி ஒன்றிய செயலர் சதீஷ், தே.மு.தி.க., மாவட்ட செயலர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

