/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் போராட்டம்
/
ஆக்கிரமிப்பை அகற்ற மக்கள் போராட்டம்
ADDED : அக் 26, 2024 08:01 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் டவுன் பஞ்சாயத்து, 5வது வார்டில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்-குள்ள துர்கை அம்மன் கோவில் அருகே பொது கழிப்பிட இடத்தை, தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். வரும் நவம்-பரில், கோவில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளதால், ஆக்கிர-மிப்பை அகற்றக்கோரி, நேற்று காலை, 10:00 மணிக்கு அப்பகுதி மக்கள், வீரகனுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகை-யிட்டு போராட்டத்தில்
ஈடுபட்டனர். தொடர்ந்து அலுவலக நுழைவு பகுதியில் பதாகை வைத்து, போலீசாரிடம் வாக்குவா-தத்தில் ஈடுபட்டனர்.
பின், 'வரும், 29க்குள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை எனில், 30ல், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்' என, செயல் அலுவலர் கார்த்திகேயனிடம் மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், ''30 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வீடு கட்டி குடியிருந்து வருகிறார். அவர் பட்டா வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால்
நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது,'' என்றார்.