/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்கள் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி
/
மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்கள் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி
மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்கள் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி
மின்கம்பங்கள் மீது விழுந்த மரங்கள் மின்சாரம் துண்டிப்பால் மக்கள் அவதி
ADDED : டிச 02, 2024 03:53 AM
ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை முதல், பலத்த காற்றுடன் மழை பெய்-தது. இதில், 40 அடி பாலம் அருகே மரம், சாலை குறுக்கே விழுந்ததில், மலைப்பாதையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 'ஸ்கை பார்க்' அருகே, சாலையோரம் மரம் வேரோடு சாய்ந்து அருகே இருந்த மின் கம்பம் மீது விழுந்தது. மரத்துடன் சேர்ந்து மின் கம்பமும் முறிந்து விழுந்ததில், கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் ஏற்காட்டில் இருந்து மலைக்கிரா-மங்களுக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதேபோல் தலைச்சோலை செல்லும் வழியில் மின்கம்பி மீது பெரிய சவுக்கு மரம் முறிந்து விழுந்தது. தவிர மலைக்கிராமங்க-ளுக்கு செல்லும் பல்வேறு சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் சாலை குறுக்கே விழுந்ததில் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன. விழுந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறை-யினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள், மழையில் நனைந்த படியே மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒண்டிக்கடைக்கு செல்லும் மின்சாரம் சரிசெய்யப்பட்டு, மதியம் வினியோகிக்கப்பட்டது. அதேநேரம் டவுன் பகுதிக்கு வழங்கப்-பட்ட மின்சாரம், சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மின் வினியோகம் வழங்கப்பட்ட நிலையிலும், 10 நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை. அடிக்கடி மின்தடை ஏற்பட்டபடியே இருந்-தது. டவுன் பகுதி மட்டுமின்றி, மலைக் கிராமங்கள் இருளில் மூழ்கின.
இரவில் வரவேண்டாம்
நாகலுார் செல்லும் வழியில் உள்ள மரப்பாலம் பகுதியில், தரைப்-பாலத்தை உயர்த்தும் பணி நடந்து வருகிறது. இதற்கு சாலையின் ஒரு பகுதி தோண்டப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால், அந்த இடத்தில் சரிந்து மழைநீர் வெள்ளம்போல் ஓடுகிறது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மலைப்பாதை ஓரங்களில் ஆங்காங்கே லேசான நிலச்ச-ரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்காட்டில் நேற்று முன்தினம், 144 மி.மீ., மழை மட்டுமின்றி, நேற்று காலை, 6:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 68 மி.மீ., மழை பெய்துள்ளது. குளிரின் தாக்கம் அதிகம் இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்-கப்பட்டது. மேலும், இரவில் ஏற்காடு மலைப்பாதை, மலைக்கி-ராமங்களுக்கு பயணிப்பதை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறையினர் அறிவுறுத்தினர்.
சுவர் இடிந்தது
ஏற்காடு, கொம்புத்துாக்கியை சேர்ந்த ராமசுந்தரம் என்பவரது வீட்டின் பின்புற சுவர் சரிந்து விழுந்தது. வீட்டின் வெளிப்புறம் சுவர் விழுந்ததால் வீட்டில் இருந்த ராமசுந்தரம், அவரது மனைவி மலர்
தப்பினர்.