/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விடுதி 'செப்டிக் டேங்க்' கழிவால் மக்கள் அவதி
/
விடுதி 'செப்டிக் டேங்க்' கழிவால் மக்கள் அவதி
ADDED : நவ 03, 2024 01:25 AM
விடுதி 'செப்டிக் டேங்க்'
கழிவால் மக்கள் அவதி
பனமரத்துப்பட்டி, நவ. 3-
பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், மாணவியர் தங்கும் விடுதி உள்ளது. அங்கு, 90க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கியுள்ளனர். ஆனால் விடுதி, 'செப்டிக் டேங்க்' நிரம்பி, அதன் கழிவு குறும்பர் தெரு கால்வாயில் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள், கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மேலும் வீடுகளை சூழ்ந்த கழிவால் கொசுத்தொல்லை அதிகமாகி அடிக்கடி காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை ஏற்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் செப்டிக் டேங்க் கழிவை கால்வாயில் விடுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.