/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்
/
அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்
ADDED : டிச 25, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: கனககிரி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் தெருவில், 100க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில், போதிய எண்ணிக்கையில் தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் வேலைக்கு சென்று விட்டு, இரவில் மக்கள் நடந்து செல்லும் போது பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் குறுக்கும், நெடுக்கும் செல்வதால் அச்சப்படுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள கழிவறையை, சரியாக பராமரிக்காத காரணத்தால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

